/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூடப்பட்ட சேதமடைந்த விடுதி கட்டடங்கள் பள்ளி, வாடகை வீட்டில் தங்கும் மாணவர்கள்
/
மூடப்பட்ட சேதமடைந்த விடுதி கட்டடங்கள் பள்ளி, வாடகை வீட்டில் தங்கும் மாணவர்கள்
மூடப்பட்ட சேதமடைந்த விடுதி கட்டடங்கள் பள்ளி, வாடகை வீட்டில் தங்கும் மாணவர்கள்
மூடப்பட்ட சேதமடைந்த விடுதி கட்டடங்கள் பள்ளி, வாடகை வீட்டில் தங்கும் மாணவர்கள்
ADDED : ஜூன் 19, 2024 05:02 AM

நரிக்குடி : நரிக்குடி கட்டணுாரில் விடுதி கட்டடம் சேதமடைந்ததால் 3 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தற்போது வரை புதிய கட்டடம் கட்டாததால் பள்ளி வளாகத்திலும், வாடகை வீட்டிலும் தங்கி வருகின்றனர்.
நரிக்குடி கட்டணூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. உளுத்தி மடை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி 11 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தரமில்லாமல் கட்டப்பட்டதால் குறுகிய காலத்தில் சேதம் அடைந்தது.
சுவர்கள் விரிசல் அடைந்து எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் அதில் தங்க லாயக்கற்றது என்பதை அறிந்து அங்குள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் தங்க வைத்தனர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி வளாகத்தில் தங்கினர்.
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி சேதமடைந்து படு மோசமாக இருந்ததால் இடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் மாணவர்கள் தங்கி வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி வசதி இல்லாததால் தற்காலிகமாக பழைய பள்ளி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியையும் அப்புறப்படுத்தி, இரு பிரிவு மாணவர்களுக்கும் தரமான நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.