ADDED : ஆக 02, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி பனையூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடந்தது. பூமாலைப்பட்டி: பிள்ளையார் நத்தம், இலுப்பையூர், சேதுபுரம், ரெகுநாதமடை, வேளாணுாரணி ஊராட்சிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். மின்வாரியம், வருவாய்த்துறை உட்பட 15 அரசு துறைகளில் 44 வகையான சேவைகளுக்கு 250க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, ஊராட்சி தலைவர்கள் குமரேஸ்வரி, ஞானபாண்டியன், அங்காள ஈஸ்வரி, முத்துமாரி, முத்துலட்சுமி, பாண்டிய லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.