ADDED : ஜூன் 01, 2024 04:02 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 540.13 எக்டேரில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் எம்.ரெட்டியப்டி கல்லுாரணியில் அமைக்கப்பட்டுள்ள குதிவாலி ரகம் விதைப்பண்ணை, காரியாபட்டி கீழத்துலுக்கன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாசிப்பயறு ரகம், நிலக்கடலை ரகம் ஆகிய விதைப்பண்ணைகளை சென்னை விதை சான்று இணை இயக்குனர் ஜோதிலட்சுமி ஆய்வு செய்தார்.
விதைப்பண்ணையில் விதை ஆதாரம் சரிபார்த்தல், பயிர் எண்ணிக்கை, பராமரிப்பு, கலவன் பயிர்களை நீக்கல், விதைப்பண்ணை விதை சான்று நடைமுறைகளின்படி பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
விருதுநகர் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா, வேளாண் துணை இயக்குனர் முத்துலட்சுமி, உதவி இயக்குனர் செல்வராணி உடனிருந்தனர்.