/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முற்றோதல் மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்
/
முற்றோதல் மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்
ADDED : டிச 07, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் முற்றோதல் மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நடந்தது.
திருக்குறள் முற்றோதல்செய்த 38 பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நடந்தது. மாணவர்களின் லட்சியம், எந்த துறையில்ஆர்வம், உயர்கல்வி பயில ஆர்வம் என கேட்டறிந்தார்.
பின் அவர் பேசியதாவது:
வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம். ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை வளர்த்து வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.