/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல் முறை வாக்காளர்கள் உடன் காபி வித் கலெக்டர்
/
முதல் முறை வாக்காளர்கள் உடன் காபி வித் கலெக்டர்
ADDED : ஏப் 02, 2024 06:36 AM
விருதுநகர் : விருதுநகரில் முதல் முறை, இளம் வாக்காளர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்டத்தில் உள்ள 5 செவிலியர் கல்லுாரிகளைச் சேர்ந்த முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நடந்த காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் தேர்தல் அலுவலர் ஜெயசீலன் பேசியதாவது:
ஜனநாயகத்தின் மிக முக்கியமான வாய்ப்பு ஓட்டுரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது ஓட்டுரிமையை நிறைவேற்ற வேண்டும்.
மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும், என்றார்.
ஓட்டளிப்பதன் அவசியம், மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், மாணவர்கள் கேள்விகள், சந்தேகங்களை கேட்டனர்.
தேர்தல் அலுவலர் பதில் அளித்தார். இதையடுத்து மாணவர்கள் கட்டாயமாக ஓட்டளிப்போம் என்றும், அருகில் உள்ள வயதானவர்களுக்கும் ஓட்டளிக்க உதவுவோம் என்றும் தெரிவித்தனர்.

