நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் இருந்து 30 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: பள்ளி, கல்லுாரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்த பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.
மேலும் ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.

