விருதுநகர் : விருதுநகரில் புத்தொழில், புத்தாக்க இயக்கம் சார்பில் நடந்த காபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள், அரசின் திட்டங்கள், தொழில் திறன்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடி பல்வேறு அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார்.
புதிய தொழில் தொடங்க ஆர்வமிக்க கல்லுாரி மாணவர்கள், ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பில் உள்ள பங்குதாரர்கள், விருதுநகர் தணிக்கையாளர் அமைப்பின் பிரதிநிதிகளுடனான இந்த நிகழ்வில் கலெக்டர் பேசியதாவது:
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக துணிகர முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, உலகத்தரம் வாய்ந்த தொழில்வளர் காப்பகங்களை வடிவமைப்பது, தொழில் விரைவாக்க பயிற்சிகள் அளிப்பது, சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்துவது, தொழில் முனைவு சார்ந்த பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிப்பது போன்ற பலவகையான செயல்திட்டங்களை வகுத்து இயங்கி வருகிறது, என்றார்.