/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நொறுங்கி விழும் தபால் ஊழியர் குடியிருப்புகள் மராமத்தை எதிர்பார்க்கும் ஊழியர்கள்
/
நொறுங்கி விழும் தபால் ஊழியர் குடியிருப்புகள் மராமத்தை எதிர்பார்க்கும் ஊழியர்கள்
நொறுங்கி விழும் தபால் ஊழியர் குடியிருப்புகள் மராமத்தை எதிர்பார்க்கும் ஊழியர்கள்
நொறுங்கி விழும் தபால் ஊழியர் குடியிருப்புகள் மராமத்தை எதிர்பார்க்கும் ஊழியர்கள்
ADDED : ஆக 27, 2024 05:52 AM

விருதுநகர் : விருதுநகரில் தலைமை தபால் அலுவலகம் அருகே இயங்கும் தபால் ஊழியர் குடியிருப்புகள் சன்ஷேடு விழுந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மராமத்து செய்ய ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகரில் தலைமை தபால் அலுவலகம் அருகே 1984ல் தபால் அலுவலர்கள், ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஏ, பி, சி பிளாக்குகள் ஆக அமைந்துள்ள . இதில் எம்.டி.எஸ்., போஸ்ட்மேன் ஊழியர்களுக்கு 12 வீடுகள், கிளர்க் ஊழியர்களுக்கு 12 வீடுகள், மேற்பார்வை அலுவலர்களுக்கு 3 வீடுகள் உள்ளன.
இதில் ரயில்வே தபால் துறையினருக்கும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. 3 தளத்தில் அமைந்துள்ள இக்கட்டடங்கள் தற்போது மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. தற்போது தபால் துறையில் கட்டுமான பணிக்கான சிவில் பொறியியல் அதிகாரிகளே இல்லாததால் மராமத்து, கட்டுமான பணிகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பை பயன்படுத்தாமல் வெளியில் பலர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
தற்போது 7 முதல் 8 வீடுகளில் தான் ஆட்கள் உள்ளனர். மற்ற வீடுகள் காலியாக உள்ளன. மராமத்து, ஒயிட்வாஷ் செய்து பல ஆண்டுகளாகின்றன. கட்டி முடித்த பின் ஓரிரு முறை தான் மராமத்து நடந்துள்ளது.
பல வீடுகளில் கதவு, ஜன்னல்களை திறப்பது கடினம், சன்ஷேடுகள் விழுந்து நொறுங்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஆகவே தபால் துறை ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை புனரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.