/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வழங்கும் செட்டில்மென்ட் பட்டாவிற்கு வசூல் வேட்டை
/
அரசு வழங்கும் செட்டில்மென்ட் பட்டாவிற்கு வசூல் வேட்டை
அரசு வழங்கும் செட்டில்மென்ட் பட்டாவிற்கு வசூல் வேட்டை
அரசு வழங்கும் செட்டில்மென்ட் பட்டாவிற்கு வசூல் வேட்டை
ADDED : ஆக 08, 2024 04:18 AM
அருப்புக்கோட்டை: அரசு இலவசமாக வழங்கும் செட்டில்மெண்ட் பட்டாவிற்கு வசூல் வேட்டை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபூபக்கர் சித்திக் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் :
பாலசுப்பிரமணியன், (மா.கம்யூ.,): எனது 16 வது வார்டில் குடிநீர் உப்பு தண்ணீராகத்தான் வந்து கொண்டிருக்கிறது. வாறுகால்களும் அள்ளப்படுவது இல்லை. கழிவுநீர் நிறைந்துள்ளது.
பழனிச்சாமி, துணைத் தலைவர்: மேல்நிலைத் தொட்டி பணிகள் முடிவடைந்த உடன் உங்கள் வார்டு உட்பட ஒரு சில வார்டுகளுக்கு புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
சுந்தரலட்சுமி, தலைவர்: மழைக்காலம் துவங்குவதை ஒட்டி நகரில் உள்ள அனைத்து வார்டுகளும் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
ராமதிலகவதி, (அ.தி.மு.க.,) : நகரில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுங்கள்.
ஜெயகவிதா, (தி.மு.க.): புறநகர் பகுதிகளில் போதை பொருட்களின் புழக்கம், குடித்துவிட்டு கும்மாளம் இடுவது அதிகம் நடக்கிறது. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்ரகுமான், (தி.மு.க.,): தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கும் செட்டில்மென்ட் பட்டாக்களுக்கு எனது வார்டில் இடைத்தரகர்கள் மூலம் 10 ஆயிரம், 20 ஆயிரம் என வருவாய்துறையினர் வாங்குவதாக புகார் வந்துள்ளது. நடவடிக்கை எடுங்கள்.
அகமது யாசீர், (தி.மு.க.,): ரயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்திற்கும் இடையூராக ஆவின் பாலகம் உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.