நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் மேட்டமலை ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன்ஆய்வு செய்தார்.
மேட்டமலை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 26.44 லட்சம்மதிப்பில் குளம் துார் வாரும் பணி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ 2.79 லட்சம் மானியத்தில் கட்டப்படும் 86 குடியிருப்பு வீடுகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ 3.50 லட்சம் மானியத்தில் கட்டப்படும் குடியிருப்பு வீட்டையும் பார்வையிட்டார்.
மேலும் சடையம்பட்டி, பெரிய ஓடைப்பட்டி, சங்கரலிங்கபுரம் கிராமங்களில் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

