/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை
/
ராணு வீரர் உடலுக்கு கலெக்டர் இறுதி மரியாதை
ADDED : செப் 07, 2024 04:57 AM
சாத்துார்:வெம்பக்கோட்டை அருகே மேலாண் மறைநாடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு கலெக்டர் ஜெயசீலன் நேரில் இறுதி மரியாதை செய்தார்.
மேலாண்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் பாண்டியன் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகபணிபுரிந்து வந்தார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் போர் ஒத்திகை பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி ராணுவவீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.