ADDED : மார் 29, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் 35வது ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ஹரிராம் சுந்தரவேல் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் சோலைராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். கொல்கத்தா தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் பதிவாளர் சுப்பிரமணியம் நடேசன் பேசினார்.
கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், கல்லுாரி துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

