/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் கல்லுாரி கனவு திட்டம்
/
விருதுநகரில் கல்லுாரி கனவு திட்டம்
ADDED : மே 10, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லுாரி படிப்பை தொடர வழிகாட்டும் கல்லுாரி கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கத்தில் மே 11 காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
இதில் 50 க்கும் மேற்பட்ட அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், வேளாண் கல்லுாரிகள், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகள், அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
எனவே பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் படிப்பை தேர்வு செய்ய வேண்டும், என கேட்டுள்ளார்.