ADDED : செப் 04, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பாக மகளிர் நலன் காக்க மகத்தான சேமிப்பு திட்டம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார்.
அருப்புக்கோட்டை தலைமை தபால் நிலைய அதிகாரி மாரிமுத்து மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம், சேமிப்பு திட்டங்கள் பற்றியும் பேசினார்.
அலுவலர்கள் கிருஷ்ண பிரியா, அர்ச்சனா ஆகியோர் பெண் குழந்தைகள் நலனுக்காக பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வ மகள் திட்டத்தை விளக்கினர்.
பேராசிரியை சுகன்யாதேவி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் அமுதா, ராகப்பிரியா, மாரிமுத்து, கலைச்செல்வி செய்தனர். மாணவி மகாபாரதி நன்றி கூறினார்.