/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது
/
கஞ்சா கடத்தி விற்பனை கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஏப் 27, 2024 02:16 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஷாய்காமன் 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ஷாய்காமன். இவர் கிருஷ்ணன் கோவிலில் தங்கி, பி.டெக் இரண்டாமாண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஆந்திரா சென்று திரும்பிய இவர் நேற்று மதியம் 1:30 மணிக்கு கல்லூரி அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் 500 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததை கண்டறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார், கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* திருத்தங்கல் அண்ணாகாலனியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி 31. இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் 250 கிராம் கஞ்சாவை ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தார். இதனை கைகாட்டி பஜாரில் வாகன சோதனை செய்த எஸ்.ஐ.ராமர் கண்டறிந்து, கஞ்சா, டூவீலர், ரூ.7 ஆயிரத்து 500ஐ, பறிமுதல் செய்து மருது பாண்டியை கைது செய்தார்

