ADDED : மார் 07, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் அமைந்துள்ள ரத்தினம் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு தீபம் ஏற்றும் விழா, நற்சான்றிதழ் விழா, பணி நியமன ஆணை வழங்கும் விழா என முப்பெரு விழாக்கள் நடந்தது.
கல்லூரி சேர்மன் விஜயகுமார் தலைமை வகித்தார். துணை சேர்மன் சிந்துரேகா முன்னிலை வகித்தார். மதுரை வேலம்மாள் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ரேவதி கலந்து கொண்டார்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பிரபல மருத்துவமனைகள் நேர்காணல் நடத்தினர். இதில் 37 செவிலியர் மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதல்வர் தாமரைச்செல்வி மற்றும் அலுவலர்கள் செய்தனர்.