ADDED : மார் 05, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாப்பட்டியில் சமூக நலன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி, சீதன பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உட்பட கலந்து கொண்டனர்.