ADDED : பிப் 28, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் வழங்கும் சமுதாய வளைகாப்பு திரு விழா நடந்தது.இதில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சீதன பொருட்கள் வழங்கினார்.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். சாத்துார், வெம்பக்கோட்டை, வட்டாரத்தை சேர்ந்த 200 கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார். முன்னதாக பெரியார் நகரில் எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.