ADDED : ஜூலை 28, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வர் சீதா லட்சுமி தமிழக மருத்துவத்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருக்கான பணி நிறைவு பாராட்டு விழா அரசு மருத்துவக்கல்லுாரியில் நடந்தது.
இதில் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாபுஜி, அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை துணை முதல்வர் அனிதா, நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன், கண்காணிப்பாளர் அன்புவேல் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.