நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, காரியாபட்டியில் வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் பாலாலயம் நடத்தப்பட்டு, மார்ச் 22ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கி, மங்கள இசை, மகா கணபதி பூஜை, புண்யாஹவாசனம், மஹாலெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, ரஷாபந்தனம், 3ம் கால பூஜைகள் முடிவடைந்து, கடம்புறப்பாடு, யாத்ரா தானம், யாகசாலையிலிருந்து புறப்பாடாகி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் சந்திரமோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

