ADDED : மே 19, 2024 11:37 PM

அ நிறம் | அளவு
காரியாபட்டி,: காரியாபட்டி கரியனேந்தல் பேத்தியாள் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, ஜெப பாராயணம், தீப ஆராதனை நடந்தது. 2ம் கால யாகசாலை பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், வருண ஹோமம், சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, தனலட்சுமி பூஜை, பாபனாபிஷேகம், திரவியாகுதி நடந்தது.
மூன்றாம் காலை யாகசாலை பூஜை, ருத்ர ஜெபம் சமகம், பாராயணம், புருஷ சூக்தம். எந்திர பிரதிஷ்டை, கோபுர கலசம் பிரதிஷ்டை பூஜை நடந்தது. பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். நேற்று காலை 10.30 மணிக்கு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது.
