/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓடையில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்; தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் அதிருப்தி

ADDED : ஏப் 11, 2024 06:33 AM

சிவகாசி : சிவகாசி அரசு மருத்துவமனையில் இடிக்கப்பட்ட கட்ட கழிவுகளை எதிரே பெரியகுளம் கண்மாய் செல்லும் ஓடையில் கொட்டப்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் கட்டட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்படுகிறது. இடிக்கப்பட்ட கட்டடத்தின் கழிவுகள் மருத்துவமனை எதிரே ரயில்வே ஸ்டேஷன், தென்றல் நகர் வழியாக பெரியகுளம் கண்மாய் செல்லும் ஓடையில் கொட்டப்பட்டுள்ளது.
தவிர ஓடை கரையில் தன்னார்வர்களால் வளர்க்கப்பட்ட மரச் செடிகளிலும் கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஓடையில் ஏற்கனவே முட்புதர்கள் ஆக்கிரமித்திருந்த நிலையில் தண்ணீர் வெளியேற வழி இன்றி சிறு குளம் காலனி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது.
இந்நிலையில் ஓடை முழுவதுமே கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற வழி இல்லை. இதனை அகற்றாவிட்டால் நாளடைவில் துார்ந்து ஓடை இருந்ததற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலும் மறைத்து விடும். எனவே இங்கு கட்டடக்கழிவு கொட்டப்படுவதை தடுப்பதோடு கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.