நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா குறித்தஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆக. 16 வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஒ.சிவக்குமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். தாசில்தார் லோகநாதன் வரவேற்றார்.
கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, இருக்கன்குடி, நத்தத்து பட்டி, அப்பனேரி, கே.மேட்டுப்பட்டி ஊராட்சித் தலைவர்கள், நாட்டாண்மைகள் கலந்து கொண்டனர்.