/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடரும் வாகன பறிப்பு: மெத்தனத்தில் போலீஸ்
/
தொடரும் வாகன பறிப்பு: மெத்தனத்தில் போலீஸ்
ADDED : ஜூலை 11, 2024 04:35 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தினம் ஒரு டூவீலர் பறிப்பு சம்பவம் நடப்பதில் போலீசார் மெத்தனத்தில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 32, நேற்று முன்தினம் இரவு பாப்பாங்குளம் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது நடந்து வந்த 2 பேர் அவரை வழிமறித்து டாஸ்மார்க் கடைக்கு வழி கேட்டுள்ளனர்.
பின்னர் ராமகிருஷ்ணன் தனது வண்டியை எடுக்க முயன்ற போது, இருவரில் ஒருவன் பைக் சாவியை பிடுங்கிக் கொண்டு பையில் இருந்த அலைபேசியை பறிக்க முயன்ற போது அழகர்சாமி பயந்து ஓடி விட்டார். இதை யடுத்து இருவரும் அவரின் பைக்கை எடுத்துகொண்டு ஓடி விட்டனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் தொடர்ந்து டூ வீலர்கள் பறிப்பு சம்பவம் நடந்து வருவதை போலீசார் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.