/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யானைகளால் விளைநிலங்களில் தொடரும் சேதம் --விவசாயிகள் தவிப்பு
/
யானைகளால் விளைநிலங்களில் தொடரும் சேதம் --விவசாயிகள் தவிப்பு
யானைகளால் விளைநிலங்களில் தொடரும் சேதம் --விவசாயிகள் தவிப்பு
யானைகளால் விளைநிலங்களில் தொடரும் சேதம் --விவசாயிகள் தவிப்பு
ADDED : ஆக 25, 2024 04:15 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிவாரப் பகுதி தோப்புகளில் யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளதால் தீர்வு காண வழியின்றி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் மலையடிவார பகுதி விளை நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட விவசாயம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த மூன்று மாதங்களாக மலைப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்குள் புகும் யானை கூட்டம் தென்னை மரங்களை சாய்த்தும், குருத்துகளை பிடுங்கியும், மாமரங்களை ஒடித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மலையடிவாரத்தில் உள்ள புரசம்பாறை கருப்பசாமி கோயில் பீட்பகுதியில் பொன்னுச்சாமி என்பவரின் தோப்புக்குள் வந்த யானைகள் பாதுகாத்து வளர்த்து வந்த வாழை மரங்கள், பத்துக்கும் மேற்பட்ட தென்னை கன்றுகளை சேதப்படுத்தியதுடன், தண்ணீர் பாய்ச்சுவதற்கான குழாய்களையும் உடைத்துச் சென்றுள்ளது. வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் சேதத்திற்கான இழப்பீடு பெற்றுத் தருவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.