ADDED : ஜூலை 16, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ராஜலட்சுமிசெய்திக்குறிப்பு: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து 38 கிளைகளிலும் கடன் மேளா, டெபாசிட் மேளா ஜூலை 18ல் நடக்கிறது. மாவட்டத்திலே இங்கு தான் அதிக வட்டிக்கு டெபாசிட் வழங்கப்படுகிறது.
மகளிருக்கு சிறப்பு இட்டு வைப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இட்டு வைப்பு திட்டம், 18 வயது முதல் 21 வயதுடையவர்களுக்கு பிரின்ஸ்ஸோ இட்டு வைப்பு திட்டம் சிகரம் இட்டு வைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் கிளைகளை அணுகி கடன் பெற்று கொள்ளலாம். தொடர்புக்கு உதவி பொதுமேலாளர்கள் அலைபேசி எண் 94899 27009, 94899 27006 பேசலாம், என்றார்.