ADDED : மே 04, 2024 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடும் வெயிலின் தாக்கத்தால் நிருபர் ராஜா சங்கர் 42,பலியானார்.
அருப்புக்கோட்டை அருகே சின்ன புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜா சங்கர்.
இவர் தனியார் டிவியில் அருப்புக்கோட்டை பகுதி நிருபராக உள்ளார்.
மே 2ல் காரியாபட்டி ஆவியூரில் நடந்த குவாரி வெடி விபத்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
தொடர்ந்து வெயிலில் நின்று பணி செய்ததால் நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.