ADDED : மே 06, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசியில் வயது முதிர்ந்த தம்பதி வீட்டிலேயே இறந்து கிடந்தனர்.
சிவகாசி முண்டகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை 85. இவரது மனைவி கிரகலட்சுமி 80. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பதி இருவரும் முண்ட கன் தெருவில் உள்ள வீட்டில் வசித்துவந்தனர்.
இரு நாட்களாக தம்பதி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் பூட்டப்பட்டிருந்தது.
அருகில் உள்ளோர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் இருவரும் இறந்து கிடந்தனர். காரணம் குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.