ADDED : ஜூலை 16, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பூபால் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சுப்பையா 65, இவரது மனைவி வேலம்மாள், 60, இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு முன்பு உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவர்களிடமிருந்த அலைபேசியை பறித்துச் சென்றனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.