/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் ஆவின் பால் தட்டுப்பாடு
/
அருப்புக்கோட்டையில் ஆவின் பால் தட்டுப்பாடு
ADDED : மே 10, 2024 11:58 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அலையும் நிலையில் உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து500 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. 15 க்கும் மேற்பட்ட முகவர்கள் ஆவின் பாலை தங்கள் கடைகளில் இருந்தும், வீட்டுக்கு வீடும் விநியோகம் செய்கின்றனர்.
ஆவின் பிரீமியம் பால் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கும், அரை லிட்டர் 30 ரூபாய்க்கும், ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் 22 ரூபாய்க்கும்விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 20 நாட்களாக அருப்புக்கோட்டையில் ஆவின் பால் விநியோகம் தட்டுப்பாடாக உள்ளது. ஆவின் பாலை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகம் வழக்கமான பாலை விட 600, 700 லிட்டர் குறைவாக வழங்குவதால் நகரில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து தனியார் பாலை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.