/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை 'ஸ்டிரைக்' : தொழிலாளர்கள் பாதிப்பு
/
பட்டாசு ஆலை 'ஸ்டிரைக்' : தொழிலாளர்கள் பாதிப்பு
ADDED : மே 24, 2024 05:59 PM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழன் பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் - டாப்மா, நேற்றுமுதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவக்கியுள்ளனர்.
போராட்டத்தால், இச்சங்கத்தின் கீழ் இயங்கும், 250 பட்டாசு ஆலைகளை மூடப்பட்டுள்ள நிலையில் 10,000 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, 'டாப்மா' சங்க செயலாளர் மணிகண்டன் கூறியதாவது:
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஏற்பட்ட 10 பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இவை, நாக்பூர் உரிமம் பெற்று, செயல்பட்ட பெரிய பட்டாசு தொழிற்சாலைகள்.
அங்கு ஆய்வு நடத்தாமல், மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும், 25 சிறு பட்டாசு ஆலைகளை மூடி சீல் வைத்துள்ளனர். இதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளோம். பாரபட்சமாக நடத்தப்படும் ஆய்வை நிறுத்தாவிட்டால், விரைவில் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.