/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.260 கோடிக்கு பயிர்க்கடன் இலக்கு
/
ரூ.260 கோடிக்கு பயிர்க்கடன் இலக்கு
ADDED : ஜூன் 12, 2024 06:08 AM
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 180 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு ரூ.260 கோடி வரை பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் தேவையுள்ள விவசாயிகள் வி.ஏ.ஓ., வழங்கும் பயிர் அடங்கல், சிட்டா, ஆதார், ரேஷன் நகல் ஆகியவற்றுடன் அருகே உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பபெறலாம்.
இதுவரை பயிர்க்கடன் பெறாதவிவசாயிகள் அருகில் உள்ள கடன் சங்கங்களில் உரிய பங்குத்தொகை செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம், என்றார்.