ADDED : ஆக 13, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள கோயில்களில் ஹிந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி நடந்தது.
தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் சுத்தம் செய்ய பணி நடந்தது. அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள விநாயகர் கோயில், வாழவந்த அம்மன் கோயில், கல்லுாரணி மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், குருணை குளம் அய்யனார் கோயில், காளையார் கரிசல்குளம் பெருமாள் கோயில், பண்ணை மூன்றடைப்பு கருப்பசாமி கோயில், சேது புரம் செல்லியம்மன் கோயில், பனையூர் பெருமாள் கோயில் உட்பட கோயில்களில் உழவாரப் பணிகள் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடந்தது.

