/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாந்தோப்பில் யானைகள் புகுந்து சேதம்
/
மாந்தோப்பில் யானைகள் புகுந்து சேதம்
ADDED : ஜூலை 05, 2024 04:24 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நகராட்சி குடிநீர் தேக்கம் பின்புறம் யானைகள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி குடிநீர்த்தேக்கம் பின்புறம் வனசுத்தி காடு பகுதியில் வனப்பகுதியை ஒட்டி 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அம்பேத்கர் நகர் மாலையாபுரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வனராஜ், லிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட 20 விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வன பகுதியில் இருந்து வரும் யானை கூட்டம் மா மரங்களை தொடர்ந்து ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மாம்பழ விளைச்சல் ஏமாற்றியுள்ள நிலையில் மாமரங்களை யானைகள் அழித்து வருவது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இப்பகுதியில் 5 முதல் 15 ஆண்டுகள் வளர்ந்துஉள்ள 150 மா மரங்களின் பெரிய கிளைகளை முற்றிலுமாக யானைகள் சேதப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டும் இதே போல் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மரங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
வனராஜ்: தொடர்ந்து விவசாய பகுதிக்குள் உள் நுழையும் யானைகளை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள அகழிகள் மண்மேவி உள்ளன. பாதிப்புகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதுடன் யானைகள்பகல் நேரத்தில் உள் நுழையும் போதும் வனத்துறையினர் தகுந்த ஒத்துழைப்பு வழங்கி விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.