/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய்களில் சேரும் கழிவுநீரால் பாதிப்பு
/
கண்மாய்களில் சேரும் கழிவுநீரால் பாதிப்பு
ADDED : ஜூலை 25, 2024 03:51 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களில் கழிவு நீரை விடுவதால் தண்ணீர் கெட்டு விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல் போகிறது என, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
ராம் பாண்டியன், வைகை, காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளது. இவற்றில் அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் இருந்து மழை நீர் வரத்து ஓடைகள் வழியாக தண்ணீர் கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்த ஓடைகளில் வீடுகளின் கழிவுநீர், திருமண மண்டபங்கள் ஒட்டல்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால் கண்மாய் தண்ணீரில் கழிவுநீர் கலந்து மாசுபட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உரிய கூட்டத்தினை நடத்தி கழிவுநீரை மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரபாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: தெற்கு நத்தம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். காரியாபட்டி, அருப்புக்கோட்டை தாசில்தார்கள், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை, விவசாயத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.