/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் தடுப்புச்சுவர் சேதம், செயல்படாத குடிநீர் பிளான்ட் விருதுநகர் நேருஜி நகர் மக்கள் அவதி
/
வாறுகால் தடுப்புச்சுவர் சேதம், செயல்படாத குடிநீர் பிளான்ட் விருதுநகர் நேருஜி நகர் மக்கள் அவதி
வாறுகால் தடுப்புச்சுவர் சேதம், செயல்படாத குடிநீர் பிளான்ட் விருதுநகர் நேருஜி நகர் மக்கள் அவதி
வாறுகால் தடுப்புச்சுவர் சேதம், செயல்படாத குடிநீர் பிளான்ட் விருதுநகர் நேருஜி நகர் மக்கள் அவதி
ADDED : ஜூலை 07, 2024 11:47 PM

விருதுநகர் : வாறுகால் தடுப்புச்சுவர் சேதம், கருமை நிறத்தில் குடிநீர் வினியோகம், ஓடாத மினரல் குடிநீர் பிளான்ட் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் நேருஜி நகர் மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் நேருஜி நகரில் 4 தெருக்கள், தீயணைப்புத்துறை பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மதுரை ரோடு வழியாக மீனாம்பிகை பங்களா செல்லும் வளைவில் உள்ள வாறுகால் கான்கீரிட் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதை மறுபடியும் அமைக்காமல் பிளாஸ்டிக் பேரிகார்டு வைத்தனர். அதுவும் தற்போது சேதமாகியுள்ளது.
தீயணைப்புத்துறை பணியாளர்கள் குடியிருப்பு செப்டிக் டேங்க், வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை. இதில் மண் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட மினரல் குடிநீர் பிளான்ட் தற்போது பழுது ஏற்பட்டு செயல்படாமல் உள்ளது.
வீடுகளுக்கு 16 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது வந்த குடிநீர் கருமை நிறத்தில் துார்நாற்றத்துடன் உள்ளது. தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இரவில் வீடுகளுக்கு அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. தெருக்களில் உள்ள வாறுகால்களை சுத்தம் செய்ய வாகனங்களில் வருபவர்கள் கழிவு நீரை தெரு முழுவதும் வடித்து செல்கின்றனர்.
மதுரை ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வளைவில் வாறுகால் தடுப்புச்சுவர் சேதமாகியது. இதை மறுபடியும் அமைக்காமல் பிளாஸ்டிக் பேரிகார்டு வைத்துள்ளனர்.
- அனிஸ் சபரி கிருஷ்ணன், கல்லுாரி மாணவர்.
கருமை நிற குடிநீர் வினியோகத்தை தடுக்க வேண்டும். இதை குடிப்பதால் உடல் உபாதைகள் தான் ஏற்படும். தற்போது விலைக்கு குடிநீர் வாங்குகிறோம். எனவே வீடுகளுக்கு சீரான முறையில் தரமான குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும்.
- ஜான்சி ராணி, குடும்பத் தலைவி.
மினரல் குடிநீர் பிளான்ட் முறையாக பராமரிக்கப்படாததால் செயல்படாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- பிச்சை கனி, சமூக ஆர்வலர்.