ADDED : ஆக 22, 2024 02:15 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூர் - கீழ்க்குடி வரையுள்ள 8 கி.மீ., ரோடு மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்ல சிரமபடுகின்றனர்.
திருச்சுழி பரளச்சி அருகே மேலையூர் - கீழ்க்குடி ரோடு உள்ளது. இதன் வழியாக பரளச்சி, செங்குளம், வாமபுரம், பூலாங்கால், கீழ்க்குடி வழியாக சாயல்குடி, பெருநாழிக்கு தனியார் பஸ்கள் சென்று வருகிறது.
இந்த பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் அருகில் ஊர்களுக்கு படிக்க செல்கின்றனர். இந்த ரோட்டில்செல்லும் தனியார் பஸ்களை நம்பித்தான் உள்ளனர். ஆனால், ரோடு ஒரு வாகனம் வந்து செல்லும் வகையில் குறுகலாக உள்ளது. ரோடும் சேதமாக இருப்பதால் பஸ்கள்வந்து செல்ல சிரமப்பட்டும், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத நிலையில் உள்ளது.
3 நாட்களுக்கு முன்பு செங்குளம் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற தனியார்பஸ் பாதி சாய்ந்து விட்டது. ரோடு சரியில்லாததால் ஒரு சில பஸ்கள் மட்டும் வருகின்றன. மற்ற பஸ்கள் வேறு பாதையில் சென்று விடுகின்றன. இந்த பகுதியில் உள்ள மக்களும், பள்ளி மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் 3 கி.மீ., தூரம் இருவழி சாலையாக மாற்றியுள்ளனர். மீதமுள்ள ரோடு இரு வழிச்சாலையாக மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.