/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் ஒரே மாதத்தில் சேதம்
/
புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் ஒரே மாதத்தில் சேதம்
புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் ஒரே மாதத்தில் சேதம்
புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் ஒரே மாதத்தில் சேதம்
ADDED : ஜூலை 31, 2024 06:22 AM

சிவகாசி, : சிவகாசி காந்தி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட வாறுகால் ஒரே மாதத்தில் சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் புதிதாக வாறுகால் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
பெரும்பான்மையான இடங்களில் வாறுகால் தரம் இல்லாமல் அமைக்கப்படுவதால் வாறுகால் தடுப்புச் சுவர் அவ்வப்போது இடிந்து விழுகின்றது. காந்தி ரோட்டில் ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ரோடு, வாறுகால் அமைக்கப்பட்டது. கட்டப்பட்ட ஒரு மாதத்திலேயே இதன் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து விழுந்து விட்டது.
இதனால் கழிவு நீர் வெளியேற வழி இல்லை. மழைக்காலங்களிலும் தண்ணீர் ஓடுவதற்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.