/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுப்பங்குளம்-நாரணாபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
அனுப்பங்குளம்-நாரணாபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
அனுப்பங்குளம்-நாரணாபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
அனுப்பங்குளம்-நாரணாபுரம் ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 24, 2024 01:59 AM

சிவகாசி: சிவகாசி அனுப்பங்குளத்திலிருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அனுப்பங்குளத்தில் இருந்து நாரணாபுரம் செல்லும் 2 கி. மீ., ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. பெரும்பான்மையான இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இப்பகுதியில் பட்டாசு ஆலைகள் உள்ளன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்புப் பணிக்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
அனுப்பங்குளம் பகுதி மக்கள், கன்னி சேரி, ஆர்.ஆர்.நகர்., கலெக்டர் அலுவலகம் , விருதுநகர், செல்வதற்கு நாரணாபுரம் செல்லும் ரோட்டினை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் நாரணாபுரம், ஜமீன் சல்வார் பட்டி லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் சாத்துார் செல்வதற்கு இதே ரோட்டினைத்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அனுப்பங்குளம் நாரணாபுரம் ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.