/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் சேதம் ரூ. 20 ஆயிரம் அபராதம்
/
குழாய் சேதம் ரூ. 20 ஆயிரம் அபராதம்
ADDED : மே 28, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த சுதாகரன், சந்தோஷ்குமார் ஆகியோர் மாநகராட்சி அனுமதி இன்றி கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டும் போது மாநகராட்சி குடிநீர் குழாயினை சேதப்படுத்தினர்.
மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, நகர திட்டமிடுநர் மதியழகன், மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆகியோர் இருவருக்கும் தலா ரூ. பத்தாயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.