/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் போடப்பட்ட மூன்றே மாதத்தில் ரோடு, வாறுகால் சேதம்
/
சிவகாசியில் போடப்பட்ட மூன்றே மாதத்தில் ரோடு, வாறுகால் சேதம்
சிவகாசியில் போடப்பட்ட மூன்றே மாதத்தில் ரோடு, வாறுகால் சேதம்
சிவகாசியில் போடப்பட்ட மூன்றே மாதத்தில் ரோடு, வாறுகால் சேதம்
ADDED : மார் 24, 2024 01:12 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 39 வது வார்டில் போடப்பட்ட மூன்றே மாதத்தில் ரோடு, வாறுகால் சேதமடைந்ததால் ரூ. ஒரு கோடி நிதி வீணாகியதாக மக்கள் புலம்புகின்றனர்.
மேலும் அங்கு கழிவுநீர் ரோட்டிலேயே தேங்குவதால் தொற்றுநோய் பாதிப்பிற்கு மக்கள் ஆளாகின்றனர்.
சிவகாசி உழவர் சந்தை பகுதியில் பகுதியில் ரோடு, வாறுகால் சேதம் அடைந்திருந்தது. எனவே அங்கு புதிதாக ரோடு, வாறுகால் போடுவதற்காக ரூ. ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாக ரோடு, வாறுகால் போடும் பணி நடந்தது.
ஆனால் தரம் இல்லாமல் போடப்பட்டதால் ரோடு மூன்று மாதத்திலேயே சிதைந்து விட்டது. மேலும் வாறுகாலும் திட்டமிடாமல் கட்டப்பட்டதால், கழிவு நீர் வெளியேற வழி இன்றி ரோட்டிற்கு வந்துவிட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த ரோட்டில் வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதேபோல் அருகில் உள்ள 38 வது வார்டிலும் தரம் இல்லாமல் ரோடு போடப்பட்டுள்ளது.
புதிதாக ரோடு, வாறுகால் போட ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கியும் அதனை தரம் இல்லாமல் போட்டு பணத்தை வீணடித்து விட்டதாக மக்கள் புலம்புகின்றனர்.

