/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பால வடிகால் குழாய்கள் சேதம் செடிகள் வளர்ந்து பாதிப்பு
/
பால வடிகால் குழாய்கள் சேதம் செடிகள் வளர்ந்து பாதிப்பு
பால வடிகால் குழாய்கள் சேதம் செடிகள் வளர்ந்து பாதிப்பு
பால வடிகால் குழாய்கள் சேதம் செடிகள் வளர்ந்து பாதிப்பு
ADDED : ஆக 16, 2024 03:48 AM

விருதுநகர்: விருதுநகரில் அருப்புக்கோட்டை பால வடிகால் குழாய்கள் சேதம் ஏற்பட்டுஉள்ளது. மேலும் பாலத்தில்ஆங்காங்கே செடிகள் வளர்ந்து பாதிப்பை சந்திக்கின்றன.
ரயில் பாதையை எளிதில் கடந்து செல்லவும்,போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் அருப்புக்கோட்டை ரோட்டில் மேம்பாலம் 2020ல் கட்டபட்டது. செயல்பாட்டுக்கு வந்த பின் ரோடு சேதம் காரணமாக 2020 காலகட்டங்களில் வாகன ஓட்டிகள் தவித்தனர். அதற்கு பின் ரோடு போடப்பட்டது. தற்போது ரோடு வசதியில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் பாலத்தில் மழைநீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்ட வடிகால் குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துஉள்ளன.
இதனால் மழைநீர் எல்லா இடங்களிலும் பரவலாக கீழே செல்கிறது.மழைநீர் வடியும் வடிகால்களை சீரமைத்து நேரடியாக நிலத்திற்கு அடியில் மழைநீர் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். பாலத்தை யொட்டி வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
குழாய்களில் வளர்ந்துஉள்ள அரச மர செடிகளை அகற்ற வேண்டும். இவை நன்கு வளர்ந்தால் பாலத்தில் உறுதி தன்மையையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது.
ஆகவே மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அருப்புக்கோட்டை மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஆங்காங்கே குப்பை கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.

