/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தின் கதவுகள் சேதம்
/
மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தின் கதவுகள் சேதம்
மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தின் கதவுகள் சேதம்
மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனத்தின் கதவுகள் சேதம்
ADDED : ஆக 07, 2024 06:45 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி குப்பை சேகரிக்கும் லாரியின் கதவு சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் துாய்மை பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகளில் ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இவைகளில் பெரும்பான்மையான வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கதவு உள்ளிட்டவைகள் சேதம் அடைந்துள்ளது.
சமீபத்தில் காமராஜர் பூங்கா பகுதிகளில் குப்பை சேகரிக்கும் லாரியில் டிரைவர் இருக்கை அருகேயுள்ள கதவு எதிர்புறம் உள்ள கதவு இரண்டும் உடைந்து தொங்கியபடி உள்ளது. உடைந்த கதவுகளை தற்காலிகமாக கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த குப்பை அள்ளும் வாகனம் செல்லும்போது கயறு அறுந்து கதவு விழுந்துவிட வாய்ப்புள்ளது.
இதனால் இந்த குப்பை வாகனத்தின் அருகே செல்லும் டூவீலர் ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த வாகனத்தின் மூலம் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் கதவுகளை சரி செய்ய வேண்டும். மேலும் சேதம் அடைந்துள்ள மற்ற வாகனங்களையும் சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.