/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான அங்கன்வாடி மையம்; முழுமையடையாத பாலம்
/
சேதமான அங்கன்வாடி மையம்; முழுமையடையாத பாலம்
ADDED : ஜூன் 19, 2024 05:08 AM
வத்திராயிருப்பு : வ.புதுப்பட்டி பேரூராட்சி 2வது வார்டில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்தால் அச்சம், சுகாதார வளாகமின்றி தவிப்பு, முழுமையடையாத பாலம் உட்பட பல்வேறு குறைகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.
கிறிஸ்தியான்பேட்டை தெற்கு, வடக்கு, நடுத்தெருக்களை கொண்டது இந்த வார்டு. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில், கட்டடம் கட்டி பல ஆண்டுகளான நிலையில் தற்போது முழுமையாக சேதமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் காணப்படுகிறது. அங்கன்வாடி மையத்தை சுற்றி சுகாதார கேடு காணப்படுவதால் அடிக்கடி விஷ பூச்சிகள் நடமாட்டம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியும் கட்டி பல ஆண்டுகளான நிலையில் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. வடக்கு தெருவில் கட்டப்பட்டுள்ள பாலங்களின் பணிகள் முழுமை அடையாமல் அரைகுறையாக காணப்படுகிறது.
ஆண், பெண் இருபாலருக்கும் சுகாதார வளாக வசதி இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இதுபோன்ற அடிப்படை வசதி குறைபாடுகளை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.