/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மின் கம்பம் விபத்து அச்சம்
/
சேதமான மின் கம்பம் விபத்து அச்சம்
ADDED : ஆக 12, 2024 04:28 AM

காரியாபட்டி, : காரியாபட்டியில் மின் கம்பம் சேதம் அடைந்துள்ளதால் எப்போது விழுமோ என்கிற விபத்து அச்சத்தில் அப்பகுதி குடியிருப்போர் உள்ளனர்.
காரியாபட்டி பெரியார் நகர் முதல் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பம் சேதமடைந்து, கம்பிகள் துருப்பிடித்து உள்ளன. பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் ஆபத்து உள்ளது.
அப்பகுதியில் சிறுவர்கள் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பர். மழை நேரங்களில் மின் கசிவு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து பல முறை மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் எப்போது விழுமோ என்கிற விபத்து அச்சத்தில் அப்பகுதி மக்கள் கடந்து செல்கின்றனர். விபத்திற்கு முன் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.