/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான குகன்பாறை-சிப்பிப்பாறை ரோடு
/
சேதமான குகன்பாறை-சிப்பிப்பாறை ரோடு
ADDED : மே 09, 2024 04:55 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறையில் இருந்து சிப்பிப்பாறை செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் குகன்பாறையில் இருந்து சிப்பிப்பாறை 3 கி.மீ., துாரத்தில் உள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்கள், பட்டாசு ஆலைகள் அதிக அளவில் உள்ளன. விவசாய காலங்களில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும் விளை பொருட்களை எடுத்து வரவும் இந்த ரோட்டில் தான் வாகனங்கள் சென்று வருகின்றன.
இதேபோல் இப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கும் வாகனங்கள் இதே ரோட்டில் தான் சென்று வருகின்றன. இந்த ரோடு அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. ரோடு முழுவதுமே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. எனவே இங்கு சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.