/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
/
சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : மே 24, 2024 02:04 AM

சிவகாசி: சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி தேன் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சேதமடைந்துள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி தேன் காலனி பஸ் ஸ்டாப் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இத்தொட்டியின் மூலமாக இப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்த நிலையில் சேதம் அடைந்தது. 2012ல் ரூ. ஒரு 1. 73 லட்சம் மராமத்து பணிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியின் அனைத்து துாண்களும் முற்றிலும் சேதம் அடைந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் தொட்டியின் மேற்பகுதியும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியிலேயே புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அந்தத் தொட்டி இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
சேதம் அடைந்த தொட்டி அருகே குடியிருப்புகள், மகளிர் சுய உதவி குழு கட்டடம், கோயில், பஸ் ஸ்டாப் உள்ளது. இதனால் எப்போதுமே தொட்டி அருகே சிறுவர்கள் விளையாடுகின்றனர்.
அந்த நேரத்தில் தொட்டி இடிந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.