ADDED : ஏப் 28, 2024 06:10 AM

சிவகாசி, ;   சிவகாசியில் பள்ளி அருகே சேதமடைந்துள்ள ரோடால் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் ரோட்டில் 3 பள்ளிகள் உள்ளன. இதே ரோட்டின் வழியாகத்தான் சித்துராஜபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும்.
இப்பகுதியில்  பள்ளி அருகே வளைவுப் பகுதியில் ரோடு சேதம் அடைந்துள்ளது. சிறிய பள்ளமாக இருந்த நிலையில் தற்போது மெகா பள்ளமாக மாறிவிட்டது.
ரோட்டின் நடுப்பகுதியில் சேதம் அடைந்திருப்பதால்  டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். பள்ளத்தை தவிர்ப்பதற்காக ஓரமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றது.
எனவே இங்கு உடனடியாக சேதம் அடைந்த ரோட்டில் சீரமைக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

