/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாவாலி ரோட்டின் பிளவுகளால் அபாயம்
/
பாவாலி ரோட்டின் பிளவுகளால் அபாயம்
ADDED : ஆக 13, 2024 12:27 AM

விருதுநகர் : விருதுநகரில் இருந்து பாவாலி செல்லும் ரோட்டில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ரோடு முழுவதும் சேதமாகும் நிலை உருவாகியுள்ளது.
விருதுநகரில் இருந்து பாவாலி செல்லும் ரோடு மண் ரோடாக இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய ரோடாக அமைக்கப்பட்டது. கனரக வாகனங்கள் போலீசாரின் வாகன சோதனையை தவிர்ப்பதற்காக அதிகமான பாரத்தை ஏற்றி செல்லும் போது இப்பகுதி வழியாக செல்கின்றன.
இந்த ரோடு கனரக வாகனங்கள் போகும் அளவிற்கு முறையாக அமைக்கப்படாததால் ரோடுகளில் ஆங்காங்கே பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்வதால் விரிசல் பெரிதாகி ரோடுகள் பாழாகும் நிலைக்கு வந்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கனரக வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் செல்ல முடிவதில்லை.
எனவே பாவாலி ரோட்டில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீரமைத்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.