/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் முக்குராந்தலில் பேனர்களால் விபத்து அபாயம்
/
சாத்துார் முக்குராந்தலில் பேனர்களால் விபத்து அபாயம்
சாத்துார் முக்குராந்தலில் பேனர்களால் விபத்து அபாயம்
சாத்துார் முக்குராந்தலில் பேனர்களால் விபத்து அபாயம்
ADDED : ஆக 03, 2024 04:32 AM
சாத்துார்: சாத்துார் முக்குராந்தலில் ரோடு வரை ஆக்கிரமித்து பேனர் வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் முக்குராந்தல் பகுதி காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும். மேலும் கட்சியினர் பெரும்பாலும் முக்குராந்தலிலேயே ஆர்ப்பாட்டம் போராட்டம் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
மேலும் கட்டட பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த பகுதியில் ஒன்றாக கூடியே வேலைக்குச் செல்கின்றனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் அதிக அளவில் கூடும் இடமாக உள்ளது.
இங்கு ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை அனைத்து கட்சிகளும் ரோடு வரை ஆக்கிரமித்து பேனர் வைக்கின்றனர். பிளக்ஸ் பேனர் வைப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் பேனருக்கு அடியிலேயே ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இருக்கன்குடியில் இருந்து சாத்துார் வரும் பஸ்கள் ,வேன்கள்லாரிகள் மெயின் ரோட்டிற்கு திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரோடு வரை ஆக்கிரமித்து பேனர் வைக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாவதோடு விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் நிலையில் உள்ளது.
எனவே ஆபத்து நிகழும் முன் முக்குராந்தல் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றிட போலீஸ் , நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.